Monday, 23 November 2015

தந்தை.....!!

மகனின் முதல் நாயகன்.......... மகளின் முதல் காதல்........ - தந்தை. கருவில் சுமக்காவிட்டாலும்...... தினம் தோளில் சுமந்தவர் - தந்தை. எழுந்து நடந்த காலங்களில் , தன் இரண்டு கால்களின் மீதும் பிள்ளையை தாங்கியவர்-தந்தை. அறியா வயதில் மரியாதையின்றி ,பிள்ளைகள் பேசிய வார்த்தைகளை அன்போடு ஏற்றுக்கொண்டவர் - தந்தை..... பிஞ்சுக் கால்களின் உதைகளை.....பாசத்தோடு பொறுத்துக்கொண்டவர்-தந்தை. ...... அன்று மட்டும் அல்ல. ....... இன்று வரை தான்..... பள்ளியிலிருந்து பிள்ளைகளை அழைக்க தாமதமானதால்.... அவர்களின் கோபத்தையும் இரசித்துக்கொண்டிருக்கிறாய்.... உன் வறுமையை காட்டாமல் , கேட்ட பொருளை வாங்கிக் கொடுத்து வருகிறாய்....... இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம் அப்பா... நான் மகளாக பிறந்ததை விட .....உன் மகனாக பிறந்திருக்கலாம்....... ஆம்.....!! என்னால் உன்னைப் போன்ற பாசமான தந்தை ஆக முடியாதே.....!! அப்பா...... உன் அன்பிற்கு அளவில்லை ...... பாசத்திற்கு பாரபட்சமில்லை.... கருணையில் குறையில்லை..... நீ இல்லாமல் நாங்கள் யாருமே இல்லை. ..... உன் பாசத்தின் முன்பு.....இன்று உலகின் அறிவுகள் தேற்றே போகிறது அப்பா.......!!

No comments:

Post a Comment