Sunday, 22 November 2015

கருமை......!!

கருமை உலகின் அமைதி - கருமை. குருடனின் மொழி- கருமை. கரையும் காகம்- கருமை. விழிகளின் கரு- கருமை. உலகில் கருமை இன்றி எதுவுமே இல்லை. ஏன் வெளிச்சம் கூட கருமை இருப்பதால் தான் வெளிப்படுகிறது. எல்லா இடங்களிலும் கருமையை மகிழ்ச்சியோடும் வாழ்வின் ஓர் அங்கமாகவும் ஏற்றுக் கொள்ளும் இந்த சமுதாயம், ஏன் பெண்களின் கருப்பு நிறத்தை இழிவு படுத்துகிறது.....? ஏன் பெண் கருப்பாக இருக்கக்கூடாதா.....?? செய்தித்தாளில் படித்த செய்தி.......! ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் நிச்சயம் முடிந்துவிட்டது.. திருமணத்திற்கு இருந்த இடைவேளையில்...அவனுக்கு அந்ந பெண்ணை பிடிக்கவில்லை. காரணம் காதல் இல்லை..... வீட்டில் சண்டை இல்லை..... ஒரே ஒரு காரணம்...... பெண் கருப்பாக இருக்கிறாளாம்.... என்ன காரணம் இது....?? இன்று சமுதாயத்தில் , காதலித்த பெண்கள் எங்களை விட்டு சென்றுவிடுகின்றனர் என்று வருந்தும் இளைஞர்களுக்கு..... வருந்தி பல பாடல்கள் பெண்களை இழிவுப்படுத்தி வெளியாகுகின்றன.. ஏன் ஆண்கள் ,பெண்களை விட்டு செல்வதே இல்லையா....? பெண்கள் என்றாவது ஆண்களை இழிவுப்படுத்தி பேசியுள்ளனரா...? பாடியுள்ளனரா...??. சரி....பெண்களை ஒதுக்குவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்துவிட்டு போகட்டும்....... ஆனால் கருமை ஒரு காரணமா...???. காதல் மட்டுமல்ல ,உலகில் பல காரியங்களுக்கு பெண்ணின் கருமை தடைவிதிக்கும் காரணமாக உள்ளது...... ஆண்கள் கருப்பாக இருந்தால் கவலை இல்லை ......ஆனால் பெண்கள் சிவப்பாக தான் இருந்தாக வேண்டும். பெண்களும் மனிதர்கள் தானே......!! ஒன்று தெரிந்துக்கொள்ளுங்கள்..... இன்று இத்துனை அழகு சாதன பொருட்கள்....விளம்பரங்கள் மூலம் வெளியாவதற்கு காரணம்....ஒவ்வொரு தருணங்களிலும் ஆண்கள், பெண்களின் கருமையை சுட்டிக்காட்டி இழிவுப்படுத்தியதுதான்... அனைத்து பெண்களும் ....மாப்பிள்ளை சிவப்பாக தான் வேண்டும் என்று நினைத்தால்....என்ன ஆகும்....?? பல காலங்களாக ஆண்களுக்கு ஒரு விதிமுறை...... பெண்களுக்கு வேறு விதிமுறை கொண்டு தான் இந்த உலகம் இயங்கி வருகிறது... ஏன் அதை சமமாக்குவது முடியாத காரியமா என்ன...? இது ஆண்களை இழிவுப்படுத்த கூறுவதில்லை .... சிகப்பான பெண்கள் கூட ,கருப்பு நிறம் கொண்ட பெண்களை இழிவுபடுத்துவது வழக்கமாகிவிட்டது..... ஒன்று கேட்கிறேன் ...... சச்சின் கருப்பாக இருந்திருந்தால் , அவரை ஒதுக்கி இருப்போமா...?? இல்லை. .. திறமை இருந்ததால் அவர் உயர்ந்தார்..... பெண்களின் திறமை 90% பார்க்கப்படும் பல்வேறு இடங்களில் அவர்களின் தோற்றமும் 10% கவனிக்கப்படுகிறது.... ஆண்களுக்கு இந்த விதிமுறைகள் இல்லையே. ... திறமை, ஒழுக்கம், சுத்தம், மரியாதை இவற்றை எதிர்ப்பார்க்கும் பலர் கூடவே பெண்களின் அழகையும், அதிலும் குறிப்பாக சிகப்பழகை எதிர்ப்பார்ப்பது நியாயமாகப் படவில்லை. ... உலகில் எல்லாம் அழகு தான். கருப்பு அழகில்லை என்ற எண்ணம் ஒழிக்கப்பட வேண்டும். கருப்பு என்பது குறை யா என்ன.....???. கருப்பான பெண்கள் சாதித்ததில்லையா...??? இல்லை இனி சாதிக்கதான் போவதில்லையா....??? சிறப்பான பெண்களை மட்டுமே திருமணம் செய்துக்கொள்ள தேடும் பெரும்பாலான ஆண்களுக்கு ........ வாழ்க்கை கருப்பாகவே அமைந்துவிடுகிறது......

No comments:

Post a Comment